பாஜக தேர்தல் அலுவலகம் சென்னையில் இன்று திறப்பு

பாஜக தேர்தல் அலுவலகம் சென்னையில் இன்று திறப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அலுவலகம், சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று திறக்கப்படுகிறது.

இதற்காக இன்று அதிகாலை 4 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை நடத்தப்பட உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

தேர்தல் பணிகளுக்காக கமலாலயத்துக்கு அருகில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், ஆனால், திறப்பு விழா நிகழச்சிகளும் ஹோமங்களும் மட்டும் இன்று அதிகாலை 4 மணி முதல் கமலாலயத்தில் நடைபெறும் என்றும் பாஜக அலுவலகச் செயலாளர் சர்வோத்தமன், ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in