Published : 22 Dec 2021 08:55 AM
Last Updated : 22 Dec 2021 08:55 AM

ஆடைக்கான ஜிஎஸ்டியை 5% ஆக குறைக்க மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொழில், வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதம்:

கரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருத்தி நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஜவுளி தொழில் அதிக அளவிலான சவால்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு ஜவுளி தயாரிப்புகளின் ஜிஎஸ்டி அளவை 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, அது வரும் 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு குறு, சிறு, நடுத்தர ஜவுளி மற்றும் துணி உற்பத்தி நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளதுடன், லட்சக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்வதாக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஜிஎஸ்டியை பழைய அளவான 5 சதவீதத்திலேயே நீடிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது. எனவே, இந்த விஷயத்தை நிதித்துறையிடம் எடுத்துச் சென்று, ஜவுளி, ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x