

மே 16-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்களை வாக்களிக்கச் செய்யும் வகையில், சிவகங்கையில் வீடுவீடாக திருமணத்துக்கு அழைப்பதுபோல அழைப்பிதழ் வைத்து தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு குறைவாக நடந்த 70-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் கிராம ஊராட்சிகளில், வாக்காளர் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்ப விழாவுக்கு அழைப்பிதழ் அளிப்பது போல ‘கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்கள்’ வழங்கி வருகின்றனர். சிவகங்கை அருகே காஞ்சிர ங்கால் புதூர் கிராமத்தில் மாவட்ட புதுவாழ்வுத் திட்ட மேலாளர் வெ.அசோக்குமார் தலைமையில் வீடு வீடாக சென்று அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உடன் சென்றனர்.
காஞ்சிரங்கால் புதூரில், பொதுமக்களிடம் அழைப்பிதழை வழங்கி வாக்களிக்க அழைப்பு விடுக்கும் புதுவாழ்வு திட்ட மேலாளர் அசோக்குமார் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர். (வலது) மே 16-ம் தேதி கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்.