அரசியலமைப்பு சட்ட அடிப்படை கடமையில் ஒன்றாக புன்னகை: உயர் நீதிமன்றம் கருத்து

அரசியலமைப்பு சட்ட அடிப்படை கடமையில் ஒன்றாக புன்னகை: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

அரசியலமைப்பு சட்டத்தில் அடிப் படை கடமைகளில் ஒவ்வொரு குடிமகனும் புன்னகைப்பதை கட் டாயமாக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் மதி வாணன். இவர் சிபிஐ (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) நிர்வாகியாக உள்ளார். இவர் செப். 16-ல் குடும்பத்துடன் சிறுமலைக்கு சென்றிருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தை தனது முகநூல் பக்கத்தில், ‘துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ என்ற தலைப்பில் மதி வாணன் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து மதிவாணன் மீது வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதிவாணன், உயர் நீதிமன்றக் கிளை யில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் குடும்பத்துடன் சிறு மலைக்குச் சென்றபோது எடுத்த புகைப்படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு, நகைச்சுவையாக ‘துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

இதை வாடிப்பட்டி போலீஸார் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாமல், அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதோடு நிற்காமல் அவரைக் கைது செய்து, வாடிப்பட்டி நீதித்துறை நடு வர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அனுமதி கோரியுள்ளனர்.

ஆனால், வாடிப்பட்டி நீதித்துறை நடுவர் எம்.சி.அருண், தமிழக அரசு-நக்கீரன் கோபால் வழக்கின் அடிப் படையில் மதிவாணனை சிறையில் அடைக்க மறுத்துவிட்டார்.

நீதித்துறை பணியை சிறப்பாக வெளிப்படுத்திய வாடிப்பட்டி நீதித் துறை நடுவருக்கு நன்றி தெரி விக்கிறேன்.

இந்த வழக்கில் மனுதாரர் புகைப் படத்துக்கு தலைப்பிட்டது தவிர்த்து வேறு என்ன செய்துவிட்டார்.

மனுதாரரின் புகைப்படத்தை முக நூலில் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். நாம் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிலவற்றை நகைச்சுவையாக எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசி யலமைப்பு சட்டப்பிரிவு 51 ஏ-யில் ஒவ்வொரு குடிமகன்களின் அடிப்படை கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒவ்வொரு குடிமகனும் சிரிப்பதும் ஒரு கடமை என திருத் தம் செய்ய வேண்டிய தருணம் வந் துள்ளது. மனுதாரருக்கு 62 வயதாகி றது. புகைப்படத்தில் மகள், மருமகன் உள்ளனர். முகநூல் பக்கத்தில் வேறு 4 புகைப்படங்களும் பதிவிடப் பட்டுள்ளன.

எந்த ஆயுதமும் மனுதாரரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட வில்லை. இந்த வழக்கு ரத்து செய் யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in