

திருச்சி: திருச்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த பிரச்சார கலைக் குழுவைச் சேர்ந்த நபர், சீருடையுடன் சென்று டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்தக் கலைக் குழு பிரச் சாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழுக் கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின் றன. இக்குழுவினருக்கான வாக னம், சீருடை உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்தில் செயல்பட்டு வரும் கலைக் குழுவினருக்கு வழங்கப்பட்ட சீருடையை அணிந்த ஒருவர் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி மேற்கொண்ட விசாரணையில், சர்மிளா சங்கர் என்பவர் தலைமையிலான கலைக் குழுவைச் சேர்ந்தவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த கலைக் குழுவை இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருந்து நீக்கி பாலமுரளி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
கலைக் குழுவினருக்கு வழங்கப்பட்ட சீருடையை அணிந்த ஒருவர் டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது