

திருப்பத்தூர் நகரம் பொன்னி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(35). இவர், தனது கணவரை பிரிந்துதனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த காக் கங்கரை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை(26), இவரது நண்பர்கள் அரிகிருஷ்ணன் (27), மானவள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜீத்(25) ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து விஜயலட்சுமி தனியாக வசித்து வருவதை அறிந்து அவருக்கு செல்போன் மூலம் அடிக்கடி போன் செய்து ஆபாச வார்த்தைகளை பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த விஜயலட்சுமி 3 பேருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை தனது நண்பர்களுடன் விஜய லட்சுமியின் வீட்டுக்கு வந்து பாலியல் தொந்தரவு செய் துள்ளனர்.
அப்போது விஜயலட்சுமி கத்திக்கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கி, நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலை, அஜீத் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.