Published : 21 Dec 2021 06:26 AM
Last Updated : 21 Dec 2021 06:26 AM

மெய்நிகர் வடிவில் மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழா தொடக்கம்; மியூசிக் அகாடமியின் பாரம்பரியமான கலைச் சேவை மகத்தானது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் புகழாரம்

சென்னை: மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழாவை மெய்நிகர் வடிவில் நேற்று தொடங்கிவைத்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், மியூசிக் அகாடமியின் பாரம்பரியமான கலைச் சேவை மகத்தானது என்று பாராட்டியுள்ளார்.

கரோனா தொற்று காரணமாககடந்த ஆண்டு மெய்நிகர் வடிவில்மியூசிக் அகாடமியின் இசை விழாநிகழ்ச்சிகள் நடந்தன. இந்தாண்டும்இசைவிழா, மெய்நிகர் வடிவில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வைமெய்நிகர் வழியாகத் தொடங்கிவைத்து டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது:

100-வது ஆண்டை நோக்கிநடைபோடும் மியூசிக் அகாடமியின் பாரம்பரியமான கலைச் சேவைமகத்தானது. இளம் கலைஞர்களுக்கும், பிரபல கலைஞர்களுக்கும் மேடை அமைத்துத் தரும் மியூசிக்அகாடமியின் 95-வது ஆண்டு இசைநிகழ்ச்சிகளை தொடங்கிவைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அரங்கத்தில் ரசிகர்களின் நேரடியான கரவொலிகளுக்கிடையே நடக்கும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஈடு இணையே இல்லை.

ஆனாலும், கோவிட் 19 பேரிடரால் உலகம் முழுவதும் இருந்துஆயிரக்கணக்கான ரசிகர்கள் காணும் வகையில் நவீன தொழில்நுட்பம், மெய்நிகர் வடிவில் நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பாகப் பார்ப்பதற்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றி, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பேசியதாவது: மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை நிகழ்ச்சிகளை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்துகாணவிருக்கும் ரசிகர்கள், உலகம்முழுவதும் இருந்து மியூசிக் அகாடமியின் நிகழ்ச்சிகளை காணவிருக்கும் ரசிகர்களை மெய்நிகர் வடிவில் வரவேற்கிறேன். நிகழ்ச்சியை தொடங்கிவைக்கவிருக்கும் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக பல அரிய செயல்களைச் செய்துவருபவர்.

குழந்தை மருத்துவம், காசநோய், எயிட்ஸ் ஆராய்ச்சிகளில் கடந்த 30 ஆண்டுகளாக பல ஆய்வுகளை நடத்தியிருப்பவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ஐசிஎம்ஆர்) முக்கிய பொறுப்புவகித்தவர். மியூசிக் அகாடமியின்95-வது ஆண்டு இசை நிகழ்ச்சிகளை தொடங்கிவைப்பதற்கு சம்மதித்த டாக்டர் சௌமியா சுவாமிநாதனை இனிதே வரவேற்கிறேன். அவருக்கு சபாவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிச. 31-ம் தேதி வரை காலையில் கருத்தரங்கம், தினமும் நான்கு கச்சேரிகள் வீதம் 48 கச்சேரிகள் நடைபெறவிருக்கின்றன. இதில்பிரபல கலைஞர்களின் 24 நிகழ்ச்சிகள் நடக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 2 முதல் 4 வரை நாட்டியநிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. ஜூனியர், சப்-சீனியர், சீனியர் வகைகளில் 12 நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

பிரபலமான சீனியர் கலைஞர்களின் கச்சேரிகள் அனைத்தும்வலைதளத்தில் பதிவேற்றப்பட்டதிலிருந்து 48 மணிநேரம் இருக்கும். ஜூனியர், சப்-சீனியர் கலைஞர்களின் கச்சேரிகள் பதிவேற்றியபின் வலைதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மியூசிக் அகாடமியின் செயலாளர் ஸ்ரீகாந்த் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியைக் காண்பதற்கான டிக்கெட்டைப் பெற https://musicacademymadras.in/tickets/ என்ற லிங்க்கிலும் நிகழ்ச்சிகள்குறித்த விவரங்களை அறிய https://musicacademymadras.in/events/95th-annual-concerts-digital-2021-2/ என்ற லிங்க்கிலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x