குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கொடைக்கானலில் கிராம மக்கள் போராட்டம்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கொடைக்கானலில் கிராம மக்கள் போராட்டம்
Updated on
1 min read

கொடைக்கானல் மலை கிரா மத்தில் பள்ளி சென்ற சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, கூக்கால் மலை கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.

கொடைக்கான‌ல் மலைகிராமம் பாச்ச‌லூரில் பள்ளி சென்ற சிறுமி பிரித்திகா மர்மமான முறையில் உடலில் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி மேல்மலைப் பகுதியான கூக்கால் ம‌லைக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை பெற்றோர் ப‌ள்ளிக்கு அனுப்ப ம‌றுத்து பதா கைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ம‌லைக்கிராம‌ங்க‌ளில் உள்ள அனைத்து ப‌ள்ளிக‌ளிலும் க‌ண்காணிப்பு கேம‌ராக்களை பொருத்த வேண்டும்.

ப‌ள்ளி செல்லும் குழ‌ந்தைக‌ளின் பாதுகாப்பை உறுதி செய்ய‌ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைக‌ளை வ‌லியுறுத்தினர்.

கூக்கால் அரசு ப‌ள்ளி ஆசிரி ய‌ர்கள் பெற்றோர்களிட‌ம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இருப்பினும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in