

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருக்கு மீண்டும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் திருப்பத்தூரில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் 495 பொது நல மனுக்களை அதிகாரிகளிடம் வழங் கினர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் முஸ் லிம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் புர்ஹானுல்லா (43). இவரது மனைவி பர்வீன்பானு(38), இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வுக்கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தார். அதிகாரிகளிடம் மனு அளிப்பதற்கு முன்பு தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர காவல் துறையினர் ஓடிச்சென்று, பர்வீன்பானுவிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை தனியாக அழைத்துச்சென்றனர்.
பின்னர் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது, ‘‘எனது கணவர் புர்ஹானுல்லா வாணியம்பாடியில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில், கடந்த 1998-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
அந்தப் பணிக்காக பள்ளி நிர்வாகம் ரூ.5 லட்சத்தை லஞ்ச மாக கேட்டது. ஆனால், எங்களால் ரூ.1 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது. பாக்கி பணத்தை பள்ளி நிர்வாகம் கேட்டு எங்களை தொந்தரவு செய்து வந்தனர்.
இந்நிலையில், ஏதேதோ காரணங்களை சொல்லி பள்ளி நிர்வாகம் எனது கணவரை கடந்த 2007-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்தது. சம்பள பாக்கியும் தரவில்லை. இதுகுறித்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அதனடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு எனது கணவருக்கு சேர வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இது வரை நிலுவை சம்பளத்தை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனது கணவருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்’’ என்றார்.
இதையடுத்து, பர்வீன்பானு விடம் இருந்த மனுவை பெற்ற அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பர்வீன் பானுவை விசாரணைக்காக நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு
ஜோலார்பேட்டை அடுத்த சின்னமோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட காளையன் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது, ‘‘காளையன் வட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு பொதுவான தார்ச்சாலையை அதேபகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இதனால், நாங்கள் வழியில்லா மல் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பள்ளி மாணவர்களால் கல்வி நிறு வனங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய்த் துறையினர் இடத்தை ஆய்வு செய்து பொதுவழியை மீட்டுத் தர வேண்டும். ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும்’’ என கூறியுள்ளனர்.