Published : 08 Mar 2016 03:28 PM
Last Updated : 08 Mar 2016 03:28 PM

சமூக வலைதளங்களில் மக்கள் நலக் கூட்டணி தீவிரம்

மக்கள் நலக் கூட்டணியின் இணையதளப் பக்கங்கள் , சமூக வலைதளப் பக்கங்கள் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மார்ச் 8 செவ்வாய்க்கிழமை முதல், கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பிரச்சாரப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகள், படங்கள் காணொளிகள் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும்.

பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற இளைஞர்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள், இந்த சமூக வலைதளப் பக்கங்கள் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலக் கூட்டணியின் இணையதளம்: >http://makkalnalan.in/

மக்கள் நலக் கூட்டணியின் முகநூல் பக்கம்: >https://www.facebook.com/makkalnalan2016/?fref=ts>

மக்கள் நலக் கூட்டணியின் ட்விட்டர் பக்கம்: >https://twitter.com/MakkalNalan2016

மக்கள் நலக் கூட்டணியின் யுடியூப் பக்கம்: >https://www.youtube.com/channel/UCngCCElmNJP4BQwrhhH2FRQ

மக்கள் நலக் கூட்டணியின் மின்னஞ்சல் முகவரி: makkalnalantn@gmail.com

மக்கள் நலக் கூட்டணியின் வாட்ஸ் அப் எண்: 7305234234











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x