வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காத மகன்களின் மனிதாபிமானமற்ற செயல் தண்டனைக்குரிய குற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காத மகன்களின் மனிதாபிமானமற்ற செயல் தண்டனைக்குரிய குற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
Updated on
2 min read

வயதான காலத்தில் பெற்றோரை சரிவர கவனிக்காத மகன்களின் மனிதாபிமானமற்ற செயல் தண் டனைக்குரிய குற்றம் என ஒரு வழக் கில் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந் தவர் சின்னப்பா. 75 வயது விவசாயி யான இவர் கடந்த 2004-ல் வேலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத் தில் தனது மகன்கள் சண்முகம், மணி ஆகியோர் தனக்கும், தனது மனைவிக்கும் வாழ்வாதார ஊதியம் வழங்கக்கோரி ஒரு வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற தனது மகன்களான சண்முகம், மணி ஆகியோர் தனக்கு மாதந்தோறும் வாழ்வாதார ஊதியம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், மகன்களான சண்முகமும், மணியும் பெற்றோருக்கு மாதம் ரூ.400-ஐ வாழ்வாதார ஊதியமாக வழங்க உத்தரவிட்டது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் சின்னப்பாவின் மனைவி இறந்து விட்டார். இந்நிலையில் இந்த உத் தரவை எதிர்த்து மகன்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வேலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவையும் எதிர்த்து மகன்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘‘எங்களது தந்தை சொந்த மாக 40 சென்ட் நிலம் வைத்திருக் கிறார். அந்த நிலத்தில் அவர்தான் உழுது விவசாயம் செய்து வரு கிறார். அவருக்கு எங்களோடு சேர்த்து மொத்தம் 3 மகன்கள். அவர் மூத்த மகனை விட்டுவிட்டு எங்களிடம் மட்டும் வாழ்வாதார ஊதியம் கோருகிறார். இதை கவ னத்தில் கொள்ளாத கீழ்நீதிமன்றம் தந்தைக்கு மாதம் ரூ.400 வழங்க உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என அதில் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

வயதான காலத்தில் பெற் றோரை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மகன்களுக்கு உண்டு. ஆனால் இந்த மேல்முறையீட்டு வழக்கு மிகவும் துரதிருஷ்டவசமாக இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொந்த தந்தையின் மீதே அக்கறை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை வர வேற்க முடியாது. நாட்கள் செல்லச் செல்ல பெற்றோரின் வயது கூடிக் கொண்டேதான் செல்லுமே தவிர குறையாது. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் அவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவை. இதே நிலைமை நாளைக்கு இதே மனுதாரர்களுக்கும் வராது எனக் கூறிவிட முடியாது. கீழ் நீதிமன்றம் ரூ.400-ஐ அதுவும் 2 மகன்களும் சேர்ந்து வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த சொற்பத் தொகையைக் கூட தந்தைக்கு வழங்காமல் வேண்டுமென்றே மனுதாரர்கள் இழுத்தடிக்கும் நோக்கில் இந்த மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

வயதான காலத்தில் பெற் றோரை கவனிக்காத மகன்களின் செயலும் தண்டனைக்குரிய குற் றமே. எனவே அவர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. அத்துடன் அவர்கள் ரூ.400-ஐ கீழ்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து மொத்த மாக தந்தையின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து, கீழ்நீதிமன்ற உத்தரவுப்படி மாதந்தோறும் வாழ்வாதார ஊதியம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in