

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தஞ் சாவூரில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:
கருணாநிதியைப் பற்றி வைகோ குறை கூறுவது உண்மைக்குப் புறம்பானது. பிரேமலதாவே மறுக் கும்போது, வைகோ தன்னுடைய ராஜ விசுவாசத்தை அளவுக்கு அதிகமாக காட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக நீதியைக் காக்க வேண்டிய கால கட்டத்திலேயே அதை எப்படியாவது நேரடியாகவும், மறைமுக மாகவும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற தீர் மானத்தோடு இருக்கும் ஆட்சியை எதிர்க்கக் கூடிய சக்தி அகில இந்திய அள வில் காங்கிரஸூக்கு மட்டுமே உள்ளது.
தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என சொல்லக்கூடிய, சமூக நீதிக் கொள்கை உட்பட எல்லாவற்றிலும் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு உள்ளது. ஆளுங்கட்சியை தகர்க்க திமுக - காங்கிரஸ் கூட்டணியால் மட்டும் தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.