

கரூர் மாநகராட்சி கோடங்கிப் பட்டியில் கரூர் மேற்கு நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட்டு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக இளைஞரணி செயலா ளர் உதயநிதி அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் எடுத்துக்காட்டாக செயல்படுகி றார். அவர் அமைச்சராக வரவேண் டும் என மக்கள் எதிர்பார்க்கின் றனர். எங்களது விருப்பமும் அதுவாகவே உள்ளது.
திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 502 வாக்குறுதிகளில் ஆட்சி பொறுப் பேற்ற 6 மாதங்களில் 202 வாக்கு றுதிகளை முதல்வர் நிறைவேற்றி யுள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு 100 சதவீத வெற்றியை மக்கள் தருவார்கள்.
ஆட்சியர், காவல் கண்காணிப் பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரி களை ஒருமையில் பேசும் முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
திமுக கரூர் மேற்கு நகரப் பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.