Published : 19 Dec 2021 06:07 AM
Last Updated : 19 Dec 2021 06:07 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: உள் மாவட்டங்களில் பனி மூட்டம் ஏற்படும்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களில் பனி மூட்டம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக டிச.19-ம் தேதி (இன்று)முதல் 22-ம் தேதி வரை தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இப்பகுதிகளில் 19-ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகவும், 20, 21, 22-ம் தேதிகளில்வழக்கத்தைவிட 2 முதல் 4டிகிரி செல்சியஸ் குறைவாகவும் இருக்கும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

18-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

19, 20-ம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35-45கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 19-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் 40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x