Published : 14 Mar 2016 09:58 AM
Last Updated : 14 Mar 2016 09:58 AM

கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில் மோசடியால் வீணடிக்கப்படுகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் மோசடியால் வீணடிக்கப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

கல்வி பெறும் உரிமைச் சட்டத் தின்படி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன என்பது குறித்த விவரங்களை குஜ ராத் மாநிலம் ஆமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (Indian Institute of Management, Ahmedabad - IIMA) செயல்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்ட வள மையம் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அதன்படி 2014-15-ம் ஆண்டுக் கான மாணவர் சேர்க்கை விவரங் களை இந்த மையம் இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள் ளது.

2014-15-ம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களில் தில்லி 44.61 சதவீதம் இடங்களையும், ராஜஸ்தான் 39.26 சதவீதம் இடங்களையும், தமிழகம் 37.75 சதவீதம் இடங் களையும் நிரப்பியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

2014-15-ம் ஆண்டில் பள்ளி நுழைவு வகுப்பில் மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 12 இடங்கள் நிரப் பப்பட்டன. இவற்றில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 100 இடங்கள் தனியார் பள்ளிகளைச் சார்ந்தவை ஆகும். இவற்றில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 140 இடங்கள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி நிரப்பப்பட வேண்டும். ஆனால், 48 ஆயிரத்து 740 இடங்கள் மட்டும்தான் நிரப்பப்பட்டுள்ளன. இதுதான் 37.75 சதவீதமாகும்.

முரண்பட்ட புள்ளி விவரம்

கல்வி உரிமைச் சட்டப்படி மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு குற்றஞ்சாட் டிய போது, தமிழகத்தில் 89 ஆயி ரத்து 941 மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப் பட்டிருப்பதாகவும், இது மொத்த இடங்களில் 94 சதவீதம் என்றும் பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபிதா தெரிவித்திருந்தார்.

இந்த புள்ளி விவரங்கள் அனைத் துமே ஒன்றுக்கொன்று முரண்பட்ட வையாக உள்ளன. எந்த புள்ளி விவரமும் மற்றவற்றுடன் ஒத்துப் போகவில்லை. 37.75 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக கல்வி உரிமைச் சட்ட வள மையம் தெரிவிக்கிறது.

ஆனால், தமிழக அரசின் கல் வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தில் 94 சதவீதம் என்றும், இன்னொன்றில் 64 சத வீதம் என்றும், மூன்றாவது ஆதாரத் தில் 47 சதவீதம் என்றும் கூறப் படுகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரமோ, இவற்றையெல் லாம் விட மிகக் குறைவாக 2 ஆயிரத்து 959 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாக கூறுகிறது.

தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அனைத்துமே மோசடியானவை என்பதை உணர முடிகிறது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பல ஆண்டுகள் அச்சட்டம் தமிழகத்தில் செயல் படுத்தப்படவில்லை. இப்போதும் அச்சட்டப்படியான இடங்களில் கட்டணம் செலுத்தும் மாணவர் களை சேர்த்துக் கொண்டு, அந்த இடங்கள் இலவசமாக நிரப்பப் பட்டதாக கணக்குதான் காட்டப் படுகிறதே தவிர, கல்வி உரிமைச் சட்டம் அதன் நோக்கத்தை நிறை வேற்றும் வகையில் செயல் படுத்தப்படவில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததற்கும் இதுவே காரணம் ஆகும்.

மொத்தத்தில் ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் தமிழ கத்தில் மோசடியால் வீணடிக்கப்படு கிறது. இதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x