

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடக்க உள்ள லோக் அதாலத்தில் தொழி லாளர் மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர் பான வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. இது சம்பந்தமான முதல்கட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ம் தேதி நடக்க உள்ளதால் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எடுத்துக் கொள்ளப்பட உள்ள வழக்குகள் குறித்து முன்கூட்டியே பேச்சு வார்த்தை நடத்துவதற்கான செயல்பாடுகள் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. விவரங்க ளுக்கு 044-25342834 என்ற தொலைபேசி அல்லது 1800-425-2441 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.