கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி சேத்துப்பட்டில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்: காவல்துறையினர் பேச்சுவார்த்தை

சேத்துப்பட்டில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.
சேத்துப்பட்டில் கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.
Updated on
1 min read

கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி சேத்துப்பட்டில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாவட்டம் முழுவதும் இருந்து 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பல்வேறு கிராமங்களில் உள்ள மாணவர்கள் நகர பகுதிக்கு வந்து பேருந்து மூலமாக கல்லூரிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு கல்லூரி வேளை நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண் ணிக்கை குறைவாக உள்ளதால், படியில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் கூடுதல் பேருந் துகளை இயக்க வலியுறுத்தி திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, செங்கம் உள்ளிட்ட நகரங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப் பினும், மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவர்களின் போராட் டமும், சேத்துப்பட்டில் நேற்றும் தொடர்ந்தது. சேத்துப்பட்டு நகரம் செஞ்சி சாலையில் மாணவர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தி.மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களாகிய நாங்கள், சேத்துப்பட்டில் இருந்து தி.மலைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்து படித்து வருகிறோம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து களின் எண்ணிக்கை குறைக்கப்பட் டுள்ளது.

இதனால், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய் கிறோம். தொலைதூரத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் கேட்கின்றனர். எனவே எங்களுக்கு, கல்லூரி வேளை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்று, கூடுதல் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும்” என்றனர்.

இதையடுத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்கு வரத்துக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து 30 நிமிடங்களுக்கு பிறகு சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in