ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்கக்கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த சி.பி ராதாகிருஷ்ணன்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த சி.பி ராதாகிருஷ்ணன்.
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் எக்காரணம் கொண்டும் விடுவிக்கக்கூடாது என முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேலூர் அருகே பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜக பயிற்சி முகாம் 3 நாள் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில் முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அமைச்சர் காந்தி, பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் பேசி யதை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதைவிட தரம் தாழ்ந்து பேச எங்களுக்கு தெரியும்.

தமிழக முதல்வர் மத துவேஷங் களை கலைந்து மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நீர்நிலைகளை காக்க வேண்டும். முதல்வருக்கு லஞ்சத்தை ஒழிக்க கருதினால் கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை என்பது தூக்கு தண்டனையை பெற்று அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள், தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விடுவிக்கக்கூடாது.

பிரதமரை கொன்றவர்களுக்கு தண்டனை இல்லை என்றால் மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும். தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in