‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல்: நாளை மாலை 6 மணிக்கு ஆன்லைனில் நடக்கிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல்: நாளை மாலை 6 மணிக்கு ஆன்லைனில் நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நாளை (ஞாயிறு) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

நாளைய இந்தியாவை வளமானதாகவும். அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் தொடர்ந்து இதனைவலியுறுத்தி வந்தார். கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த வகையில், ஞாயிறு மாலை6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடலை நடத்துகிறது. இதில், தேசியவடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, பெங்களூரிலுள்ள இஸ்ரோ விண்வெளித்துறையின் மேனாள் கவுரவப் பேராசிரியர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், அப்துல் கலாமோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00064 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in