

சென்னை: மாநிலங்களவையில் கடந்த 16-ம்தேதி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “விவசாயிகளுக்கான கடன் அட்டையை, அனைத்து மீனவர்களுக்கும் வழங்கும் திட்டம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பாகவத் கராட் அளித்த பதில் வருமாறு:
விவசாயிகளுக்கான கடன் அட்டையை நாடு முழுவதும் அனைத்து மீனவர்களுக்கும் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்அளித்துள்ளது. இத்திட்டத்தில்2.68 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடன் வழங்க ரூ.2 லட்சத்து85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீனவர்களுக்கு கடன் வழங்கும் நடைமுறைகளை மேலும் சீராக்க, நிலையான செயல்பாட்டு முறை கடந்த செப்.24-ல்வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அதிகமான விவசாயிகள், மீனவர்களை இணைப்பதற்கான பிரச்சாரம் கடந்த நவ.15-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.