கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்று நாடகமாடிய கட்டிடத் தொழிலாளி கைது

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்று நாடகமாடிய கட்டிடத் தொழிலாளி கைது
Updated on
2 min read

கோவை: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியை கொன்று நாடகமாடிய கட்டிடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாநகரைச் சேர்ந்த ஒரு பெண், கணவரைப் பிரிந்து17 மற்றும் 14 வயதான மகள்களுடன்வசித்து வந்தார். இதில் 10-ம் வகுப்புபடித்து வந்த 14 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி மாயமானார். இதையடுத்து அன்றும், அதற்கு மறுநாளும் மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடியுள்ளனர். பின்னர், கடந்த 13-ம் தேதி சரவணம்பட்டி போலீஸில் பெண்ணின் தாய் புகார் அளித்தார். போலீஸார் மாயமானோர் பிரிவில் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் சரவணம்பட்டி சிவானந்தாபுரத்தில் உள்ள யமுனா நகரில், சாக்கு மூட்டையில் கை, கால்கள்கட்டப்பட்ட நிலையில் சிறுமியின்உடல் மீட்கப்பட்டது. சரவணம்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், மாயமானதாக தேடப்பட்டு வந்த 14 வயது சிறுமிதான் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரவணம்பட்டி போலீஸார் மற்றும் அனைத்து மகளிர் கிழக்குப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், சிவானந்தாபுரம் யமுனா நகர் அருகே வசித்து வந்த, உயிரிழந்த சிறுமியின் குடும்ப நண்பரான முத்துகுமார்(44) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்த அவர், போலீஸாரின் தீவிர விசாரணையில் சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் கூறியதாவது: முத்துகுமாருக்கும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் இடையேபணம், நகை கொடுக்கல் வாங்கல்இருந்துள்ளது. 2 மாதங்களுக்குமுன்பு முத்துகுமார், சிறுமியின் தாயாரிடம் 2 பவுன் நகையைவாங்கி, அதனை விற்று செலவழித்துள்ளார். நகையை திருப்பித்தருமாறு சிறுமியின் தாய் கேட்டார். இதை சமாளிக்க முத்துகுமார் கடந்த 10-ம் தேதி சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அங்கு தனியாகஇருந்த சிறுமியிடம் நகையை திருப்பித் தந்துவிட்டதாக உனதுதாயிடம் பொய் சொல்ல வேண்டும்.நாளை (11-ந் தேதி) காலை உன்னிடம் அந்த நகையை கொண்டு வந்து கொடுத்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய அச்சிறுமியும் தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு முத்துகுமார் நகையைக் கொண்டு வந்துகொடுத்துவிட்டதாக தெரிவித்துஉள்ளார். உடனே முத்துகுமார் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர், மறுநாள் (11-ந் தேதி) காலை முத்துகுமார், அச்சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டுதனது வீட்டுக்கு வந்து நகையைப் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனை நம்பி வந்த சிறுமியை முத்துகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால், அவரதுவாயில் துணியை வைத்து கொன்றுஉள்ளார்.

சிறுமியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டிஅருகே வீசிவிட்டு சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் சிறுமியின் தாயாரிடம், உனது மகள்வீட்டில் இருந்த பணம் மற்றும்நகைகளை திருடிக்கொண்டு யாருடனோ சென்று உள்ளார் என்று கூறி, அவருடன் சேர்ந்து சிறுமியை தேடுவதுபோல் நடித்து ஏமாற்றி உள்ளார்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்துமுத்துகுமார் கைது செய்யப்பட்டார்.அவர் மீது போக்ஸோ, கொலை,தடயம் மறைத்தல், வீடு புகுந்து திருடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதியப்பட்டுள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in