

திருநெல்வேலி/ தூத்துக்குடி/நாகர்கோவில்: பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்க கூடாது என தெரிவித்து வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்றுமுன்தினம் தொடங் கியது. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. திருநெல் வேலி, தென்காசி மாவட்டங்களில் 400 வங்கி கிளைகளைச் சேர்ந்த 3,700 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டை யிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிமுன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சுமார் 3,000 பேர் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 175 வங்கி கிளைகள் உள்ளன. இதில் சில தனியார் வங்கி கிளைகளைத் தவிர 135 வங்கி கிளைகள் 2-வது நாளாக செயல்படவில்லை. இதன் காரணமாக 2-வது நாளாக நேற்றும் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக, 1,800-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 250-க்கும் மேற்பட்ட வங்கிகள் நேற்றும் மூடப்பட்டிருந்தன. ரூ. 300 கோடிக்கும் மேலான பண பரிவர்த்தனை முடங்கி, வாடிக் கையாளர்கள் அவதியடைந்தனர். மாவட்டம் முழுவதும் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் வாடிக்கை யாளர்கள் அவதியடைந்தனர்.