

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏற்கெனவே 100-க்கும் அதிகமான சிறிய கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில், நேற்று மேலும் 31 கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், தமிழக சமத்துவ கழகம், தமிழ் தேசிய கட்சி, மனுநீதி மக்கள் கட்சி, வ.உ.சி. முன்னேற்றக் கழகம், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு, நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை உட்பட 31 அமைப்புகளின் நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.