ஒரே நாளில் ரூ.173 கோடி மது விற்பனை

ஒரே நாளில் ரூ.173 கோடி மது விற்பனை
Updated on
1 min read

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் திங்கள்கிழமையன்று ஒரு நாள் மட்டும் ரூ.173 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முதல்முறையாக, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் திங்கள்கிழமையன்று மட்டும் 4.11 லட்சம் பெட்டி மதுவகைகளும், 1.22 லட்சம் பீர் பெட்டிகளும் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் டாஸ்மாக் கடைகளில் ரூ.173 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இதுபோல், கடந்த 14-ம் தேதியன்று ரூ.101 கோடிக்கும், அதற்கு முன்பு 6-ம் தேதி ரூ.93 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in