சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சட்டப்பேரவையிலும், நாடாளு மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அரசியல் கட்சி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் இது தொடர் பான மசோதாவை ஒரே நாளில் நிறைவேற்றிவிடலாம் என்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் வி.எல்.எத்திராஜின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி, கல்லூரி வளாகத்தில் அவரது பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறந்த வெளி அரங்கத்தை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்ட ளையின் நிறுவனத் தலைவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் எத்திராஜ் நினைவு சொற்பொழி வாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆண்- பெண் இடையே நிலவும் பாகுபாடு மறைய வேண்டு மானால் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும். அவர்கள் சமூக மற்றும் அரசியல் அதிகாரம் பெற்ற வர்களாக மாற வேண்டும். சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத் திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் இது தொடர்பான மசோதாவை ஒரே நாளில் நிறைவேற்றிவிடலாம். அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது.

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

எத்திராஜின் 125-வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் 125 மாணவிகள் கொண்ட ஒரு புதிய அமைப்பும் விழாவில் தொடங் கப்பட்டது. முன்னதாக, கல்லூரி யின் தலைவர் வி.எம்.முரளிதரன் வரவேற்றார். நிறைவாக கல்லூரி முதல்வர் ஏ.நிர்மலா நன்றி கூறி னார். விழாவில், கல்லூரி அறங்கா வலர் எம்.சேகர், துணை முதல்வர் கள் ஜீவா, மரகதவல்லி மற்றும் பேராசிரியைகள், முன்னாள் முதல்வர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in