

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3,300 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடம் மற்றும் காலிமனை டாக்டர் ராமாதேவி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இந்தக் கட்டிடத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நியாயவாடகை மற்றும் நிலுவைத் தொகையை கட்டத் தவறியதால், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.6 கோடி.
இந்த நடவடிக்கையை கோயில் இணை ஆணையர் த.காவேரி உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.