

மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னையில் 75 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கழிவுநீர் கட்டமைப்புகள் சீரமைக்கப்படா ததால், கழிவு நீர் திறந்த வெளியில் வெளியேறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் கழிப்பிடங்களில் இருந்து தினமும் 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது.
மருத்துவமனையின் கழிவுநீர் கட்டமைப்புகளை பொதுப்பணித் துறை பராமரிக்காததால் கழிவு நீர் வாய்க்கால்களில் 20-க்கும் மேற் பட்ட இடங்களில் அடைப்பு ஏற் பட்டுள்ளது. அதனால் கழிவு நீர் ஆங்காங்கே திறந்த வெளியில் செல்கிறது.
மருத்துவர்கள் கூறியதாவது: பிரிட்டிஷார் ஆட்சியில் போடப் பட்ட கழிவு நீர் கட்டமைப்புகளை காலத்துக்கு ஏற்றாற்போல் புதுப்பிக்கவில்லை. அடைப்பு ஏற்படும்போது தற்காலிகமாக மட்டுமே சரி செய்யப்படுகிறது.
இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க மருத்துவமனை நிர் வாகம் பலமுறை பொதுப்பணித் துறையிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் பொதுப்பணித் துறை யினர் அலட்சியமாக செயல்படு கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கழிவு நீர் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச் சினைக்கு முழுமையான தீர்வு காணப்படும்’’ என்றார்.