Published : 20 Mar 2016 12:15 PM
Last Updated : 20 Mar 2016 12:15 PM

வண்ண வாக்காளர் அட்டை பெற்றாலும் படங்கள் கருப்பு, வெள்ளையில்! - அதிருப்தியில் பழைய வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் வண்ண வாக்கா ளர் அட்டை வழங்கப்பட்டாலும் அதிலுள்ள புகைப்படங்கள் கருப்பு, வெள்ளை நிறத்தில் இருப்பதால் பழைய வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய தேர்தல் ஆணையமாக இந்திய தேர்தல் ஆணையம் திகழ்கிறது. 1950-ம் ஆண்டு உருவான இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று 66 வயது. இந்த ஆணையம் காலத்துக்கேற்ப பல்வேறு மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 1993-ல் வாக்காளர் அட்டை வழங்கியதும், 1998-ல் நாடு முழுவதும் அனைத்து வாக்காளர் விவரங்களையும் கணினி மயமாக்கியதும், இதன் வர லாற்றில் முக்கியமான தருணங்கள்.

சென்னையில் 39 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் உட்பட தமி ழகத்தில் மொத்தம் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாக்கா ளர் அடையாள அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. 2014-க்கு முன்ன தாக வாக்காளர் பட்டியலில் பெயர் களை சேர்த்தவர்களுக்கு கருப்பு, வெள்ளை நிற புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளே வழங்கப் பட்டன.

தேர்தல் ஆணையத்தின் மற் றொரு மாற்றமாக கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டி யலில் சேர்ந்தவர்களுக்கு ஏடிஎம் வடிவிலான பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கருப்பு, வெள்ளை நிற அட்டை களை வைத்திருக்கும் வாக்காளர் கள் ரூ.25 கட்டணத்தில் புதிய வண்ண வாக்காளர் அட்டை பெற தமி ழகம் முழுவதும் 363 சிறப்பு முகாம் கள் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 3 இடங்களில் இந்த முகாம்கள் செயல்பட்டு வரு கின்றன.

வண்ண அட்டைகளை பெறுவ தற்கு பழைய வாக்காளர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பித்து அட்டைகளை பெற்று வருகின்ற னர். இந்த அட்டைகள் மட்டுமே வண்ணத்தில் உள்ளன. புகைப் படங்கள், பழைய அட்டையில் இடம் பெற்றுள்ளதைப் போல் கருப்பு, வெள்ளை நிறத்திலேயே உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக வியாசர்பாடி யைச் சேர்ந்த ‘தேவை’ இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் எ.த.இளங்கோ கூறும்போது, “எங் கள் பகுதியில் வசிப்போர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் அட்டை பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் பெற்றுள்ள வண்ண அட்டையில் உள்ள புகைப்படங்கள் கருப்பு, வெள்ளை நிறத்திலேயே உள்ளன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.

முதலில் புகைப்படத்தை மாற்ற, புதிய வண்ண புகைப்படத்துடன் விண்ணப்பித்துவிட்டு, புகைப்படம் மாறிய பிறகு, வண்ண வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண் டும் என்று மாவட்ட தேர்தல் நிர் வாகமோ, மாநில தலைமைத் தேர் தல் நிர்வாகமோ, தெளிவுபடுத்தி யிருக்க வேண்டும். அதற்கான வசதிகளை சிறப்பு முகாம்களி லாவது செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அட்டையை மட்டும் வண்ணத்தில் கொடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

இது தொடர்பாக மாநில தலை மைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “பழைய வாக்காளர்கள் முதலில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு பிறகு, அவர்கள் வண்ண அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x