நில அளவை சரி செய்து கொடுக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற விஏஓவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.40,000 அபராதம்

நில அளவை சரி செய்து கொடுக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற விஏஓவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.40,000 அபராதம்
Updated on
1 min read

கரூர் அருகே நில அளவை சரி செய்து கொடுக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.40,000 அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை விதித்து கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம் புலியூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் கே.சீனிவாசன். இவர் வெடிக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகேசனின் சிட்டாவில் தவறுதலா இருந்த நில அளவை சரி செய்துக்கொடுக்க கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி ரூ.5,000 லஞ்சமாக பெற்றப்போது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கரூர் தலைமை குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி இன்று (டிச. 16ம் தேதி) அளித்த தீர்ப்பில், சீனிவாசனுக்கு லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரு பிரிவுகளில் தலா ரூ.20,000 ஆயிரம் வீதம் ரூ.40,000 அபராதமும், அதனை கட்ட தவறினால் தலா இரு 6 மாதங்கள் வீதம், மேலும் ஒராண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in