படப்பை, சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் ரூ.117 கோடியில் இரு பாலங்கள் அமைக்க அடிக்கல்

ரூ.117.38 கோடியில் 2 மேம்பாலங்களை அமைக்க பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  அடிக்கல் நாட்டினார். இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.117.38 கோடியில் 2 மேம்பாலங்களை அமைக்க பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

செங்கல்பட்டு: படப்பை மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் ரூ.117.38 கோடியில் 2 பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்புதொடங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் அதிமுக ஆட்சியில்கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் ரூ.90.74 கோடியில் சாலைமேம்பாலம் அமைக்கு பணிக்குஅடிக்கல் நாட்டும் விழா நேற்றுநடைபெற்றது. இதில் பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதேபோல் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் படப்பையில் ரூ.26.64 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு மேம்பாலப் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மழைக்காலம் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தற்காலிகமாக மூடும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

அதிமுக அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல. தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. புகாரின் அடிப்படையில்தான் சோதனைகள் நடைபெறுகின்றன. இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை. முன்னாள் அமைச்சர் தன்னை நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுவதால் அவர்குற்றம் படிந்தவர் என அர்த்தமில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in