

சென்னை: பார்கின்சன் நோயாளிகளுக்கு ஆழ்ந்த மூளை தூண்டுதலில்மேம்பட்ட ‘பிரெயின் சென்சிங்’ தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாக சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பார்கின்சன்நோயாளிகளுக்கு உடலில் இறுக்கம், மந்தநிலை, நடுக்கம் ஏற்படுகின்றன. ஆழ்ந்த மூளை தூண்டுதல் (டிபிஎஸ்) என்பது பார்கின்சன் நோயால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த மூளைக்குள் ஆழமாக மின்முனைகளை பொருத்துவதை உள்ளடக்கிய ஒரு நரம்பியல் மருத்துவ நடைமுறையாகும். சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2007-ம் ஆண்டு முதல் டிபிஎஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் இயக்க கோளாறு நிபுணர்கள், செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் கதிரியக்க வல்லுநர்கள், மனநலமருத்துவர்கள் உள்ளிட்ட டிபிஎஸ் சிகிச்சைக்கான அனுபவம்வாய்ந்த பல்துறை குழுவைக்கொண்ட தமிழ்நாட்டின் மிகச்சில மருத்துவமனைகளில் அப்போலோவும் ஒன்றாகும்.
கடந்த மாதம் சென்னை அப்போலோவில் 5 டிபிஎஸ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 4 பேர் பார்கின்சன் நோயாளிகள், ஒருவர் டிஸ்டோனியா நோயாளி ஆவார். தற்போது அனைவரும் நல்ல முன்னேற்றத்துடன் குணமடைந்துள்ளனர். இம்மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் இயக்க கோளாறுகள்