

சென்னை: ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருந்தான ச்யவன்ப்ராஷின்பெருமைகளை பதஞ்சலிஆராய்ச்சி நிறுவனம் உலகின்பார்வைக்கு கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி யோகபீடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுர்வேத மருந்துகளின் செயல்பாடு குறித்து ஆராய்ச்சிஅடிப்படையிலான அறிவியல் சான்றுகளை உருவாக்கும்பணியில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுவரை பல மருந்துகள் குறித்துஆய்வு செய்துள்ள இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு பழமையான பிரபல ஆயுர்வேத மருந்தான ச்யவன்ப்ராஷ் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா கூறும்போது, “நவீன அறிவியல் உலகில் பண்டைய ஆயுர்வேத மருந்தான ச்யவன்ப்ராஷ் குறித்த எங்களின் கண்டுபிடிப்பு ஒரு சிறந்த சாதனையாகும். இருமல், சளி மற்றும் காய்ச்சலால்மக்கள் அதிகம் பாதிக்கப்படும்குளிர்காலத்தில் ச்யவன்ப்ராஷ்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தினசரி பயன்படுத்தப்படும் முழுமையான ஆயுர்வேத மருந்தான ச்யவன்ப்ராஷின் நன்மைகள் குறித்து இதுவரை அறிவியல் சான்றுகள் இல்லை.
தற்போது பதஞ்சலி ஆராய்ச்சிநிறுவன விஞ்ஞானிகள், அழற்சி,காய்ச்சல், இருமல், சளி ஆகியவற்றுக்கு எதிராக ச்யவன்ப்ராஷ் எப்படி வினைபுரிகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் மருந்தியல் துறையில் நன்கு அறியப்பட்ட ‘ஃபிரான்டியர்ஸ் இன்பார்மகாலஜி’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வுக் கட்டுரையை https://www.frontiersin.org/articles/10.3389/fphar.2021.751576/full என்ற இணையதளத்தில் காணலாம்.
பதஞ்சலி தொடர்ந்து இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆயுர்வேத மருந்துகளின் அறிவியல் பூர்வ பெருமைகளை இந்த உலகுக்கு தெரிவிக்கும். இது ஆயுர்வேதத்தில் உள்ள அறிவியலை அனைவரும் புரிந்துகொள்ள உதவும்.
பல மூலிகைகளின் கலவை என்பதால் ச்யவன்ப்ராஷ் உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நமது உடலில் அழற்சிக்குஎதிரான சைட்டோகைன் அளவைஒழுங்குபடுத்துகிறது. பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் வரும் காலங்களில் பல ஆயுர்வேத மருந்துகளுக்கு இதுபோன்ற பல அறிவியல் சான்றுகளை உருவாக்கும்” என்றார்.