குடிக்க பணம் கிடைக்காததால் 2 பேர் தற்கொலை

குடிக்க பணம் கிடைக்காததால் 2 பேர் தற்கொலை
Updated on
1 min read

விழுப்புரம் அருகே பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் கபிலன் என்கிற வீரப்பன்(28). திருமணமாகாத இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாார்.

இதனை கடந்த 12-ம் தேதி இவரின் தாயார் சுந்தரம்பாள் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இதே போல் மரக்காணம் அருகே சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (55). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் தன் மனைவி கங்காமாளிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அண்ணாமலை பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in