கிண்டி அரசு ஐடிஐயில் டிச.31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஜயா ராணி அறிவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.12.2021 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்டத்தின் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

2021-ம் ஆண்டிற்கு கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள Physiotherapy Technician, Smart Phone Technician cum App Tester, Food Production General, Front Office Assistant ஆகிய பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இருக்கைகளில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை (spot admission) 31.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 31.12.2021 வரை பயிற்சியில் சேரலாம்.

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்று சேரும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லாப் பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து பயணச்சலுகை, விலையில்லாப் பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, விலையில்லா வரைபடக் கருவிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750 எனப் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், பெரிய வேலை அளிக்கும் (Top Level) மற்றும் முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் அறிய தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களுக்கு. 044-29813781, 94990 55649 அழைக்கவும்" என்று ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in