

சென்னை அண்ணா நகர் மேம்பாலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ரூ.141 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், பொறியா ளர் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத் தார். ரூ.1,354 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை கள், பாலங்கள் உள்ளிட்ட பணி களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெடுஞ்சாலைகள், சிறு துறை முகங்கள் துறை சார்பில் சென்னை அண்ணா நகரில் (அண்ணா வளைவு அருகே) ஈவெரா சாலையை நெல்சன் மாணிக்கம் சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.35 கோடியில் 361 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஜெய லலிதா காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் அண்ணா நகர், அமைந்த கரை, என்எஸ்கே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னப் பட்டு பாலம் (ரூ.2.48 கோடி), ஈரோடு மாவட்டம் கராச்சிகோரை பாலம் (ரூ.2 கோடி), திருப்பூர் மாவட்டம் மலையாண்டிப்பட்டினம் பாலம் (ரூ.1.21 கோடி), திருச்சி பொன்நகரில் ரயில்வே சந்திப்பு வரையிலான ரயில்வே மேம்பாலம் (ரூ.34.24 கோடி), ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடி மேம்பாலம் (ரூ.37.15 கோடி), சேலம் மாவட்டம் சூரமங்கலம் ரயில்வே கீ்ழ்பாலம் (ரூ.22.50 கோடி), சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள முதன்மை இயக்குநர் மற்றும் தலைமை பொறியாளர்களுக்கான ஒருங்கி ணைந்த குடியிருப்புகள், திருநெல் வேலி மாவட்டம் தென்காசியில் கட்டப்பட்டுள்ள உட்கோட்ட அலுவ லக கட்டிடம், பெரம்பலூரில் கட் டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட் பிரிவு அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.141 கோடி மதிப்பிலான பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்கள், அலுவலக கட்டிடங் களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
ரூ.1,354 கோடி பணிக்கு அடிக்கல்
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கட்ட ளையில் மேம்பாலம், வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் மேம்பாலம், சேலம் மாவட் டம் குரங்குச்சாவடி மற்றும் ஏவிஆர் ரவுண்டானா சந்திப்புகளுக்கு இடை யில் மேம்பாலம், திருவாக்கவுண் டனூர் ரவுண்டானா சந்திப்பில் மேம்பாலம், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வாணியார் ஆற்றின் குறுக்கே பாலம், குமரசம் பட்டியில் ரயில்வே மேம்பாலம், முத்துக்கவுண்டன்கோட்டையில் ரயில்வே மேம்பாலம், திருச்சியில் சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை கூடுதல் இருவழித்தடம் கொண்ட பாலம், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் பாலம், புதுக்கோட்டை மாவட்டம் சித்திராம்பூரில் பாம்பாற் றின் குறுக்கே பாலம், வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரையிலான நான்குவழி சாலையை ஆறுவழி சாலையாக மேம்படுத்தும் பணி, மதுரை சுற்றுச்சாலை இருவழி தடத்தில் இருந்து நான்குவழி தடமாக அகலப்படுத்தும் பணி, திருவள்ளூர் மாவட்டத்தில் 485 கி.மீ. மாநில சாலைகள் மற்றும் 278 கி.மீ. மாவட்ட முக்கிய சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி, மதுரை மாவட்டம் - எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வழியாக செல்லும் மதுரை - போடிநாயக்கனூர் ரயில் வழித்தடத்தில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக வடபழஞ்சியில் அமைக் கப்படவுள்ள ரயில்வே மேம்பாலம் என மொத்தம் ரூ.1,354 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரம் மதிப் பீட்டில் அமைக்கப்படவுள்ள பாலங் கள், மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், சாலைப் பணி களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.