

தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நகைக் கடை உரிமையாளர்கள் 11-வது நாளாக நேற்றும் நாடுமுழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகைகளை வாங் கவும் விற்கவும் முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகை களுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை வாபஸ் பெறக்கோரி நகைக்கடை உரிமை யாளர்கள் நாடுதழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 11-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாடுமுழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் 35 ஆயிரம் கடைகள் மூடப்பட்டிருந்தன.
சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட இடங்களில் நகைக்கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. தொடர் போராட்டத்தினால் மக்கள் நகை வாங்கவும், விற்கவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.