

உத்தராகண்ட் மாநிலத்தில் குடி யரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது ஜனநாயக விரோதமானது என திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள் ளனர்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கருணாநிதி:
உத்தராகண்ட் மாநிலத்தில் 2012-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 32, பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சுயேச்சைகள், இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. விஜய் பகுகுணா முதல்வரானார். உள்கட்சி குழப்பத்தினால் 2014-ல் விஜய் பகுகுணா பதவி விலக, ஹரீஷ் ராவத் முதல்வராக பதவியேற்றார். 2014-ல் நடந்த இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் அக்கட்சியின் பலம் 35 ஆக உயர்ந்தது.
கடந்த 18-ம் தேதி விஜய் பகுகுணா தலைமையில் 9 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதைத் தொடர்ந்து மார்ச் 28-ம் தேதி சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். இச்சூழ லில் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 9 எம்எல்ஏக்களையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் சட்டப்பேரவையில் காங்கிரல் பெரும்பான்மை பெற்றுவிடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச் சரவையின் பரிந்துரைப்படி உத் தராகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. மார்ச் 28-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தர விட்டிருந்த நிலை யில், ஒரேயொரு நாள் பொறுத் திருந்து பார்க்க மனமின்றி அவசரம் அவசரமாக ஆட்சியை கலைக்க வேண்டிய அவசியம் என்ன?
அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சட்ட நிபுணர்களும் நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த முடிவு சரிதானா என்பதை பிரதமர் நரேந்திர மோடி சிந்தித்துப் பார்ப்பார் என நம்புகிறேன்.
வைகோ:
உத்தராகண்டில் காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டிருப்பது அப்பட்ட மான ஜனநாயகப் படுகொலை யாகும். இது கடும் கண்டனத் துக்குரியது. ஆட்சி கலைக்கப்பட்ட உடனேயே உத்தராகண்டில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் ஜோஷி கூறியிருக்கிறார்.
உத்தராகண்டில் புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க துடிக்கும் பாஜகவின் முயற்சியை குடியரசுத் தலைவர் முறியடிக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.