

தர்மபுரி அருகே பொன் நகர் சாமிசெட்டிபட்டி பகுதியில் உள்ள போலன நல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பனிமலர் (30). திருநங்கையான இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு வந்தார். இங்குள்ள மணலூர் கிராமத்தில் வசித்து வந்தார். இவர், இக்கிராமத்தின் அருகில் உள்ள பரங்கிப்பேட்டை அருகே இருக்கும் பி. முட்லூர் பகுதியில் உள்ள தைலக்காட்டில் வெட்டுக்காயங்களுடன் நேற்று காலை இறந்து கிடந்தார். அவரது முகம், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநங்கை பனிமலரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.