Published : 23 Mar 2016 11:31 AM
Last Updated : 23 Mar 2016 11:31 AM

அமித்ஷா இன்று சென்னை வருகை பிறந்தநாள் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங் கில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தி னராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், மூத்த தலைவர்கள் சுப்பிர மணியன் சுவாமி, இல.கணேசன், மேகாலயா மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் உள்ளிட்டோ ரும் இந்த விழாவில் பங்கேற் கின்றனர்.

இன்று பிற்பகலில் சென்னை வரும் அமித்ஷா, மேற்கு மாம் பலத்தில் உள்ள சங்கர மடத் துக்கு வர உள்ளதாக மடத்தின் நிர்வாகி நாராயணன் ‘தி இந்து’ விடம் தெரிவித்தார். பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 2014-ல் சென்னை வந்த அமித்ஷா மேற்கு மாம்பலம் சங்கர மடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக் கது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிர மாக நடந்துவரும் நிலையில் அமித்ஷா சென்னை வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘காஞ்சி சங்கர மடத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட பயணமாக அமித்ஷா சென்னை வருகிறார். எனவே, பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க மாட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கும் திட்டமும் இல்லை’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x