காசி, ஷீரடி, குஜராத் படேல் சிலைக்கு சென்னையில் இருந்து விமான சுற்றுலா: ஜன.16 மற்றும் 27-ல் புறப்படும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு

காசி, ஷீரடி, குஜராத் படேல் சிலைக்கு சென்னையில் இருந்து விமான சுற்றுலா: ஜன.16 மற்றும் 27-ல் புறப்படும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னையில் இருந்து காசி, கயா,ஷீரடி, குஜராத் படேல் சிலை உள்ளிட்ட இடங்களுக்கு விமான சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களின் தேவைக்கேற்ப, பல்வேறு இடங்களுக்கு ரயில், விமானசுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடுசெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது 3 விமான சுற்றுலாக்களுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, சென்னையில் இருந்து வரும் ஜன.16-ம் தேதி புறப்பட்டு, குஜராத்தில் உள்ள படேல் சிலை, வெள்ளை பாலைவனம் எனப்படும் கட்ச் பாலைவனம் (ரன் ஆஃப் கட்ச்), அகமதாபாத் அக்‌ஷர்தாம் கோயில், சபர்மதிஆசிரமம், ராஜ்கோட் ஆகியவற்றைசுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 7 நாட்கள் கொண்டது.ஒருவருக்கு ரூ.31,500 கட்டணம்.

இதேபோல, ஜன.16-ம் தேதி சென்னையில் புறப்பட்டு, ஷீரடி - சனிசிங்னாபூர் - திரியம்பகேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 3 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு ரூ.14,500 கட்டணம்.

சென்னையில் இருந்து ஜன.27-ம்தேதி புறப்பட்டு காசி, கயா, அலகாபாத் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 6 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு ரூ.29,500 கட்டணம்.

விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, நட்சத்திர விடுதி, உணவு உள்ளிட்டவை இதில் அடங்கும். சுற்றுலா குறித்து மேலும் தகவல்களுக்கு 8287931973, 8287931977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in