Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

தமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக 14-ம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனையமாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

15, 16-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17-ம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைபெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

13-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம், செம்மஞ்சேரி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, சென்னை நந்தனத்தில்4 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x