Published : 10 Mar 2016 08:40 AM
Last Updated : 10 Mar 2016 08:40 AM

தந்தையின் ஈமச்சடங்கில் நளினி பங்கேற்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையிலிருக்கும் நளினி, 2 வாரங்களுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் ஈமச்ச டங்கில் பங்கேற்பதற்காக சென் னைக்கு வந்துவிட்டு, நேற்று வேலூர் சிறைக்கு திரும்பினார்.

நளினியின் தந்தை சங்கரநா ராயணன் கடந்த மாதம் 23-ம் தேதி மரணமடைந்தார். அவரது ஈமச்சடங்கில் கலந்துகொள்வதற் காக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு நாள் பரோலில் செல்ல நளினிக்கு அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாலை பரோலில் வேலூர் சிறையில் இருந்து நளினி சென்னைக்கு வந்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நளினியின் சகோதரர் ரவியின் இல்லத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தார். அந்த இல்லத்தில் நளினியின் தந்தை சங்கரநாராயணனுக்காக 3 நாட்கள் ஈமச்சடங்குகள் நடைபெறுகின்றன. தாமதமாக வந்ததால் முதல் நாள் ஈமச்சடங்கில் நளினியால் கலந்துகொள்ள இயலவில்லை. 2-ம் நாள் ஈமச்சடங்கில் நளினி சோகத்துடன் பங்கேற்றார். 2-ம் நாள் ஈமச்சடங்குகள் முடிந்த பின்னர் நேற்று மதியம் 1 மணியளவில் கோட்டூர்புரத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நளினி வேலூருக்கு அழைத்து செல்லப்பட்டார். மாலை 3.45 மணிக்கு அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரோலில் செல்லும் நளினி தனது உறவினர்களைத் தவிர வேறு யாருடனும் பேசக்கூடாது, பத்திரி கையாளர்களை சந்திக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனால் நளினியை பார்க்க அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் கோட்டூர்புரத்துக்கு வரவில்லை. குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாருடனும் அவர் பேசவில்லை.

நளினி வேலூர் சிறைக்கு புறப்பட்டுச் சென்ற பின்னர் அவரது சகோதரர் ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நளினி மிகவும் வருத்தமாக இருக்கிறார். அவர் எங்களிடம் பேசும்போது, ‘எனது சிறை தண்டனையை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அவர்களது நலனுக்காக பயன்படுத்திக் கொண்டன. அவர்களால் எனக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. சிறையில் இருந்து என்னை விடுவிக்க தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் விடுதலையாவேன் என்கிற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்தார்.

சுமார் 25 ஆண்டுகளை நளினி சிறையில் கழித்துவிட்டார். அவர் ஒரு குழந்தையின் தாயாக இருக்கிறார். மத்திய, மாநில அரசுகள் அவரை கருணையுடன் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x