

சென்னை மாநகராட்சியின் சமுதாய நலக்கூடங்கள் தேர்த லுக்காக பயன்படுத்தப்பட உள்ள தால், அதற்கான முன்பதிவு 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 61 சமுதாய நலக்கூடங்கள் இயங்கி வரு கின்றன. இவை, பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக கட்டண அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கூடத்தின் வசதிக்கு ஏற்ப ரூ.500 முதல் 15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. இக் கூடங்கள் கடந்த மாதம் முதல் இல வசமாக வழங்கப்பட்டு, பராமரிப்பு கட்டணம் மட்டும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக் கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சமுதாயக் கூடங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன. அதனால் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு அந்த சமுதாய நலக்கூடங்களுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரி தகவல்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடந்த தேர்தலின் போது, தேர்தல் பணிக்காக சமுதாய நலக்கூடங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் அப்போது செய்யப்பட்டிருந்த முன்பதிவு ரத்து செய்யப் பட்டபோது, பொதுமக்கள் அவ திக்குள்ளாயினர். இதனை தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை 3 மாதங்களுக்கு முன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபிறகே, முன்பதிவு தொடங்கும்’’ என்றார்.