லோக் ஆயுக்தா சட்டம் பற்றி எதிர்கட்சியாக இருக்கும்போது பேசுபவர்கள் ஆளுங்கட்சியான பிறகு கண்டுகொள்வதில்லை: மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வேதனை

லோக் ஆயுக்தா சட்டம் பற்றி எதிர்கட்சியாக இருக்கும்போது பேசுபவர்கள் ஆளுங்கட்சியான பிறகு கண்டுகொள்வதில்லை: மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வேதனை
Updated on
2 min read

லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்கட்சியாக இருக்கும்போது காட்டும் தீவிரத்தை ஆளுங்கட்சியான பிறகு அரசியல் கட்சிகள் காட்டுவதில்லை என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

அறப்போர் இயக்கம், மக்கள் கருத்துகளுடன் தயார் செய்த ஊழல் ஒழிப்பு ஆணைய சட்ட மசோதாவின் மாதிரி முன்வரைவு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், லோக் ஆயுக்தா தமிழ்நாடு 2016 முன்மாதிரி மசோதாவை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வெளியிட முதல் பிரதியை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பெற்றுக்கொண்டார். அதையடுத்து பிரஷாந்த் பூஷன் பேசியதாவது:

ஊழலை விசாரிக்கும் மத்திய ஊழல்தடுப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருக்கிறது. அதில் விசாரணை அதிகாரிகள்கூட தேவையான அளவுக்கு இல்லை. ஊழலை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு அவசியம். அரசுப் பணியில் இருந்தால் அவர்களுக்கு உடல் மற்றும் நிர்வாக ரீதியான அச் சுறுத்தல், துன்புறுத்தல் கூடாது. இதற்காக 2014-ல் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அறி விக்கை வெளியிடப்படவில்லை. நரேந்திரமோடி அரசு வந்தபிறகு ஊழல் குறைந்திருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்லுவேன்.

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதற்காக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. ஊழல் குறித்த மக்களின் மனநிலையும் மாற வேண்டும். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும்போது காட்டும் வேகத்தை ஆளுங்கட்சியான பிறகு காட்டுவதில்லை. டெல்லி யில் முதலில் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி, லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த முடிய வில்லை என்று கூறி விலகியது. இப்போது ஆட்சிக்கு வந்து 9 மாதங்களுக்கு மேலாகியும் இச்சட்டத்தை கொண்டு வருவதில் முனைப்புக் காட்டவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பேசும்போது, “இந்தியாவிலேயே முதன்முறை யாக கர்நாடகத்தில் 1984-ல் கொண்டு வரப்பட்ட லோக் ஆயுக்தா சட்டம் பெரும் பலன் அளித்தது. இச்சட்டம் காரணமாக அனைத்து துறை ஊழல்களை எதிர்த்துப் போராட முடிந்தது. சட்டவிரோத கனிம கொள்ளை காரணமாக முன் னாள் முதல்வர் எடியூரப்பா கைது போன்ற சம்பவங்கள் நடந்தன. கர்நாடகத்தைப் போல தமிழ்நாட் டிலும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்தால் மக்கள் பெரிதும் பயன்பெறுவர்” என்றார்.

இந்த விழாவில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக் கறிஞர் சுரேஷ், முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், உறுப் பினர் ராமையா அரியா ஆகி யோர் பேசினர். முன்னதாக அறப்போர் இயக்க உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நிறைவில், செயலாளர் சந்திர மோகன் நன்றி கூறினார். முன் னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம், இயக்க உறுப் பினர் நக்கீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in