Published : 11 Mar 2016 09:00 AM
Last Updated : 11 Mar 2016 09:00 AM

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக அணிதிரளும் சிதம்பரம், தங்கபாலு: தொகுதி பங்கீட்டு குழு அமைக்க வலியுறுத்தல்

தங்களது ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகளைப் பெறும் நோக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச் சர்கள் ப.சிதம்பரம், கே.வீ.தங்க பாலு உள்ளிட்ட கோஷ்டி தலைவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 20-ம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலை வர்களுடன் ராகுல் காந்தி ஆலோ சனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப் போது, ‘இளங்கோவன் தலைமையில் தேர்தலை சந்திக்க முடியாது. அவரை மாற்ற வேண்டும் அல்லது ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் பணிக் குழு அமைக்க வேண்டும்’ என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான அணியினர் வலியுறுத்தி யுள்ளனர். இதை ஏற்காத ராகுல் காந்தி, ‘இளங்கோவன் தலைமை யில் ஒற்றுமையாக தேர்தல் பணி யாற்றுங்கள்’ என்று அறிவுறுத்தி யுள்ளார்.

ஆனாலும் விருப்ப மனு தாக்கல், நேர்காணல் ஆகியவற்றை ப.சிதம் பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதையடுத்து, ‘எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் விருப்ப மனு அளிக் காத, நேர்காணலில் பங்கேற்காதவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது' என இளங்கோவன் திட்டவட்டமாக தெரி வித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டோர் கடந்த வாரம் டெல்லியில் மேலிடத் தலைவர்களை சந்தித்து இளங் கோவன் மீது மீண்டும் புகார் தெரி வித்தனர். அதற்கும் பலனில்லாமல் போனது. கடந்த பிப்ரவரி 13-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுக - காங்கிரஸ் கூட்ட ணியை அறிவித்தனர். அப்போது இளங்கோவன், சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த தேர்தல்களைப் போல பேச்சு வார்த்தைக் குழு எதுவும் அமைக்கப்படாததால் ப.சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் கருணாநிதி யுடனான சந்திப்பில் இடம்பெற முடியவில்லை. அதுமட்டுல்லாது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் எதிலும் நேரடியாக பங்கு பெற முடியவில்லை.

நிலைமை இப்படியே தொடர்ந் தால் தங்களது ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகளை பெற முடியாது என்பதால் இளங்கோவனுக்கு எதி ராக ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லக்குமார் உள் ளிட்ட எதிர்கோஷ்டியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்க வேண்டும் என மேலிடத் தலைவர்களிடம் வலியு றுத்தி வருவதாக அவர்களது ஆதர வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கேட்ட போது, ‘‘கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள், மண்ணின் மைந் தர்கள், வெற்றி வாய்ப்பு உள்ளவர் களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். எனவே, கோஷ்டி தலைவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கும் கோட்டா முறைக்கு இந்தத் தேர்தலில் முடிவு கட்டப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x