

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக 13, 14-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசிலஇடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15, 16-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தி.மலை மாவட்டம் செய்யாறில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று தெரிவித்தார்.