Published : 13 Dec 2021 03:06 AM
Last Updated : 13 Dec 2021 03:06 AM

பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சை கருத்து: பாகிஸ்தான் அமைப்பினர் மீது தமிழக சிபிசிஐடி வழக்கு பதிவு

சென்னை

ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் மரணம் அடைந்தது குறித்துசர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட பாகிஸ்தான் அமைப்பினர் மீது தமிழக சிபிசிஐடிபோலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், கடந்த 8-ம் தேதி புதன்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் பிபின் ராவத்,அவரது மனைவி, மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்துபாகிஸ்தானை சேர்ந்த அமைப்பினர் சிலர் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர். அந்தஅமைப்பினர் மீது தமிழக சிபிசிஐடிபோலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய முப்படைகளின் தலைமைதளபதி ஜெனரல் பிபின் ராவத்மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து ட்விட்டர்கணக்குகளில் World Conflicts Monitoring @ WorldBreakingN9, Pakistan Strategic Forum @ ForumStrategic ஆகிய அமைப்பினர் தவறான, அவதூறு செய்திகளை பரப்பியுள்ளனர். பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகைசெய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது சிபிசிஐடியின் சைபர் கிரைம்பிரிவு வழக்கு பதிவு செய்துதீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x