

வீட்டை விட்டு வாகனத்தில் புறப்படும்போது, ‘பார்த்து பத்திரமா போய்வாங்க’ என சொல்கிறோம். ஆனால், ‘கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள், வேகமாக செல்லாதீங்கள்’ என அறிவுறுத்துவது ஒரு சிலர் மட்டும்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் சாலை விதிகளை தெரிந்து கொள்வதுடன், விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியத்தை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நம் நாட்டில் வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிது. உரிமம் பெறுவதற்கு முதலில் எல்எல்ஆர் என்கிற ஓட்டிப் பழகும் அனுமதி பெற்று, 180 நாட்களுக்குள் நாம் இருக்கும் வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு சென்று வாகனத்தை ஓட்டிக் காட்டுவது வழக்கம். அந்தச் சோதனையின் போது சாலை விதிகள் பற்றியும், வாகனத்தின் சீரான ஓட்டத்தைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்படு வதும், வாகனத்தை ஓட்டிக் காட்ட சொல்வதும் வழக்கம்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்தி ருக்க வேண்டும். 50 சி.சி. மற்றும் அதற்கு குறைந்த திறனுடைய, கியர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு மட்டுமே அவர் களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப் படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் 4 சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண் டும். ஆனால், இந்த வழிமுறை களை முழுமையாக கடைப்பிடிப் பதில்லை. குறிப்பாக அரைகுறை யாக பயிற்சி பெற்று இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். இவர்களால், அப்பாவி பொதுமக்க ளும் சாலை விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர்.
சிட்டிசன் கன்சியூமர் ஆண்ட் சிவில் ஆக்ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் இயக்குநர் (ஆலோ சகர்) எஸ்.சரோஜா, சாலை பாது காப்புக் குறித்து கூறியதாவது:
மோட்டார் வாகனத்துக்குரிய சட்டம் (தமிழ்நாடு) 1974ம் ஆண்டு இயற்றப்பட்டு பின்னர், 1989-ல் அதில் திருத்தங்கள் பலவற்றை கொண்டு வந்தனர். 1989-ம் ஆண் டின் சட்டத்தின் கீழ், சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டை தாண்டினால் கூட ரூ.100 அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதிமீறல்களை மீறுவோர் மீது முறையாக நடவடிக்கை எடுக் கப்படவில்லை என்பதே நிதர்சனம்.
எனவே, மத்திய அரசு தற்போது கொண்டுவரவுள்ள சாலை பாது காப்பு சட்டம் 2015-க்கு நாம் முழுமையாக ஆதரவு அளிக்க வில்லை. மத்திய, மாநில அரசு களுக்குள் இருக்கும் நிர்வாக பிரச் சினை பேசி தீர்வு காண வேண்டும். ஆனால், சாலை விதிகளை மீறுவோர் மீண்டும் அதே தவற்றை செய்யாத வகையில் அவர்கள் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தங்கள் அவசிய மாக இருக்க வேண்டுமென்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
புதியதாக வரவுள்ள சட்டத்தில் சாதாரண விதிமுறை மீறல்களுக்கு தற்போதுள்ளதை காட்டிலும் 5 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல்களுக்கு ஏற்றவாறு வாகன உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வழிவகை செய்யப்பட்டுள் ளது. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
இறப்பை ஏற்படுத்திய விபத்து என்றால் ரூ.50 ஆயிரம் அபராதமும், சிறை தண்டனையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விபத்துகளை கட்டுப்படுத்த, விதி முறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத் தங்கள் அவசியமாக இருக் கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.