

நவீன கற்பித்தல் முறையில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப், தற்போது, ரூ.1 லட்சம் மதிப்பில் நவீன வகுப்பறையை நடிகர் லாரன்ஸ் உதவியோடு உருவாக்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திலீப், உலகமய போட்டியில் உள்ளூர் மாணவர்களையும் நிறுத்தும் பணியில் ஈடு பட்டுள்ளார். பள்ளிகளில் நவீன கற்பித்தல் முறையைப் பின்பற்றினால் வளர்ச்சி நிச்சயம் எனக் கருதிய அவர், இப்பள்ளியில் இணைய கல்வியைப் புகுத்தி வருகிறார். ஆசிரியர் திலீப் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் நான், தொடக்க பள்ளியிலேயே மாண வர்கள் கணினி அறிவை பெற வேண்டும் என, சர்வசிக் ஷா அபி யான்’ திட்டம் மூலம் 2 கம்ப்யூட் டர் பெற்று முதலில் அடிப்படை கல்வியைக் கற்றுக் கொடுத்துவந் தேன். பின்னர், பாடத்துக்குத் தேவை யான படங்களை மாணவர்களே டவுன்லோடு செய்தனர்.
பவர் பாயிண்ட் மூலம் தேவையான உரு வங்களை வரைந்தனர். அதை பதிவு செய்து மாணவர்கள் செய் யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்களையே திருத்தச் செய்தேன். பின்னர், பேசிவ் ரைட்டிங் பிராக்டிஸ் கொடுத்து கணினியில் வார்த்தை அமைக்கவும், வாக்கியங்களை உருவாக்கவும், கட்டுரைகளைத் தயாரிக்கவும் கற்றுக் கொடுத்தேன். அதை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கற்றுக் கொண்டனர்.
நடிகர் லாரன்ஸ் நடத்தும் ‘அறம் செய விரும்பு அறக்கட்டளை’ என்னை தேர்வு செய்து ரூ.1 லட்சம் நிதி அளித்தது. அந்த நிதியுதவியின் மூலம் எனது பள்ளியில் ஒரு ஸ்மார்ட் வகுப்பை தொடங்கினேன். இதற்கு பள்ளி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தது.
இதையடுத்து ஒரு வகுப்ப றைக்கு வண்ணம் தீட்டப்பட்டது. டச் ஸ்கிரீன், புரஜெக்டர், டேப்லட் ஆகியவை வாங்கப்பட்டு நவீன வகுப்பறை நிர்மாணிக்கப்பட்டது. சக ஆசிரிய பெருமக்கள் நாற்காலி, மின் விசிறிகள் வாங்கித் தந்தனர். தற்போது, இந்தப் பள்ளியில் 900 மாணவர்கள் ஸ்மார்ட் வகுப்பு மாணவர்களாக மாறியுள்ளனர். பாட அட்டவணையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பும் இடம்பெறும். ஸ்மார்ட் வகுப்பில் மாணவர்களே அனைத்தையும் இயக்கி நவீன தொழில்நுட்பத்தைக் கற்று வரு கின்றனர்.
இது தவிர, >www.dhilipteacher.blogspot.in மற்றும் >www.palli.in என இரண்டும் வலைபக்கங்களில் இதுவரை நடந்த 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளின் வினாத் தாள்களும் அப்லோடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தின் எந்தப் பள்ளி மாணவர்களும் இந்தத் தளத் துக்குச் சென்று மாதிரி வினாத் தாளை தரவிறக்கம் செய்துகொள்ள லாம். மற்ற பள்ளி ஆசிரியர்களின் கட்டுரைகள், அறிவுரை, புத்தி கூர்மை விளையாட்டுகளும் இந்த வலைபக்கங்களில் அப்லோடு செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர் திலீப் தெரிவித்தார்.
மலேசியா மலாயா பல்கலைக் கழகம் நடத்திய ‘கற்றல், கற்பித்த லில் புதிய உக்திகள்’ என்ற போட்டி யில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற ஆசிரியர் திலீப், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தகவல் தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தும் ஆசிரியருக் கான தேசிய விருதை 2012-ம் ஆண்டு ஜனாதிபதியிடம் பெற்றவர். 2013-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி கற்பிப்பது எப்படி என்கிற ஆன்லைன் போட்டியிலும் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது.