சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தார் கலவை இயந்திரத்தை மீண்டும் இயக்க அனுமதியா? - தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

கூடலூரில் மக்கள் வாழும் பகுதியில் தார் கலவை இயந்திரத்தை இயக்க மீண்டும் அனுமதி வழங்குவதா? என தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய தார் கலவை இயந்திரம் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, மக்கள் வாழும்பகுதியில் தார் கலவை இயந்திரம் செயல்படாது என்ற உறுதியை பொதுமக்களுக்கு வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்றைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி (Poker colony) பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரம் (Tar mixing plant) மீண்டும் இயக்கப்பட அனுமதி அளிக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதுடன், அந்த இடத்தில் மீண்டும் தார் கலவை எந்திரம் செயல்படாது என்ற உறுதியையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in